உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் இன்று குறைந்தது

Published On 2023-06-18 09:53 GMT   |   Update On 2023-06-18 09:53 GMT
  • தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
  • அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தன. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வந்த வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வந்தது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று தஞ்சையில் காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சியளித்த வண்ணம் உள்ளது.

அவ்வப்போது லேசான சாரல் மழை பொழிந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. எனவே இதுபோல் அடுத்து வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News