உள்ளூர் செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்பென்ஷன் திட்டம்

Published On 2023-03-06 15:34 IST   |   Update On 2023-03-06 15:34:00 IST
  • பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

தருமபுரி,

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ, சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சுருளிநாதன், பி.எம்.கவுரன், இராசா .ஆனந்தன்,கே.பாஸ்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் கனிணி இயக்குபவர்,ஊர் புற நூலகர்கள் வனப்பாதுகாவலர்கள், வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்படகோரிக்கைகளை உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News