உள்ளூர் செய்திகள்

கடலூரில் சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் இருந்த போஸ்டர்களை மேயர் சுந்தரி ராஜா அகற்றிய போது எடுத்த படம்.

கடலூரில் தடுப்புக்கட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிய மேயர்

Published On 2023-06-24 08:47 GMT   |   Update On 2023-06-24 08:47 GMT
  • சுத்தமாகவும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • அனைத்து போஸ்டர்களையும் அகற்றினர்.

கடலூர்:

தமிழகத்தில் சாலைகளில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் , கடலூர் மாநகரம் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் சுத்தமாகவும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புக்கட்டையில் ஒட்டப்பட்டு இருந்த அனைத்து போஸ்டர்களையும் அகற்றினார்கள்.

Tags:    

Similar News