உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவியை மேயர் சண்.ராமநாதன் பாராட்டினார்.

சாதனை படைத்த மாணவியை பாராட்டிய மேயர்

Published On 2022-08-11 10:33 GMT   |   Update On 2022-08-11 10:33 GMT
  • நேபாளில் இந்தோ -நேபாள் சர்வதேச தடகள போட்டி நடைப்பெற்றது.
  • மேலும் பலரும் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.

தஞ்சாவூர்:

நேபாளில் இந்தோ -நேபாள் சர்வதேச தடகள போட்டி நடைப்பெற்றது. கூடைப்பந்து, வாலிபால், பேட்மிட்டன், டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சையை சேர்ந்த சீதளாதேவி முதல் இடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார். 1500 மீட்டர் ஓட்டத்தில் வாளமர்கோட்டையை சேர்ந்த விமலா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். வாகை சூடி சொந்த ஊரான தஞ்சை வந்த வீராங்கனைகள் சீதளாதேவி, விமலா ஆகியோருக்கு பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வீராங்கனைகளை வாழ்த்தி வரவேற்றார். மேலும் பலரும் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.

Tags:    

Similar News