உள்ளூர் செய்திகள்
கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது
- கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தனிடம் ரூ.500 பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டான்.
- கைது செய்து பணம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள எடவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 28). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தனிடம் ரூ.500 பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டான்.
இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது ஆனந்தனிடம் பணம் பறித்தது தேன்கனிக்கோட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (30) என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்து பணம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.