உள்ளூர் செய்திகள்
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி சாவு
- இவள் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
- இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே ஆசியா உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள காலேகுண்டா அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அல்தாமஸ். இவரது மகள் ஆசியா (வயது8). இவள் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே ஆசியா உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.