உள்ளூர் செய்திகள்

கரடியை வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறை குழுவினரை படத்தில் காணலாம்.

செங்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த கரடியை காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்

Published On 2023-09-07 08:58 GMT   |   Update On 2023-09-07 08:58 GMT
  • மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது.
  • அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஊருக்குள் புகுந்த கரடி

குறிப்பாக மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மேக்கரை வனச்சரக உதவி அலுவலர் அம்பலவாணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ராஜபுரம் காலனியில் முகாமிட்டனர். அப்போது அங்கிருந்த குளத்தின் அருகே 100-நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தவர்கள் சிலர், கரடியை பார்த்ததாக வனத்துறை யினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பதிந்திருந்த கரடியின் காலடி தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி ஆய்வு செய்ததில் ராஜபுரம் காலனி பகுதியில் கரடியை கண்டறிந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து கரடியை அங்கிருந்து ஓட செய்தனர். அதனை பண்பொழி திருமலை கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

Similar News