உள்ளூர் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2023-07-06 09:17 GMT   |   Update On 2023-07-06 09:17 GMT
  • தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.
  • நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மீன்பிடி துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைக் கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 450 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. இந்நிலையில் இந்த விசைப்படகுகளில் கடலுக்கு செல்லும் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 1,215 பைபர் படகு களும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News