உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு அருகே குழந்தை கழுத்தை அறுத்த தந்தை கைது

Published On 2023-07-11 14:25 IST   |   Update On 2023-07-11 14:25:00 IST
  • போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
  • போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21).

கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.

அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News