உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-07-04 07:55 GMT   |   Update On 2023-07-04 07:55 GMT
  • காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், முதல மைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசிய தாவது:- 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலை பாது காக்கும் பொருட்டு முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழக அரசு தொடங்கி வைத்தது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வரா யன்மலை வட்டத்திற் குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 8 வட்டா ரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி களுக் குட்பட்ட 638 அரசுத் தொடக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் தொடக்கப் பள்ளி மாண வர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கிய முடனும் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத் தப்படவுள்ள பள்ளிகளில், காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுவினர்க்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்த ராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெத்தின மாலா மற்றும் அரசு அலு வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News