உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

Published On 2023-09-12 15:01 IST   |   Update On 2023-09-12 15:01:00 IST
  • மத்தியஅரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
  • கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டம்

கோவை.

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையில் மறியில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஆட்டோ தொழிலாளர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பெண்கள் உள்டப 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வா கிகள் பேசுகையில், அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது, பல பொருட்கள் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்களான பால், தயிர் மற்றும் உணவு தானியங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையேற்றம் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. சிறு-குறு நடுத்தர தொழில்கள் ஜிஎஸ்டி வரியால் நலிந்து வருகின்றன.அரசு துறை மற்றும் ரயில்வே ஆகிய பொதுத்துறை நிறுவன ங்களில் லட்சக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை மத்தியஅரசு இதுவரை நிரப்பவில்லை என்று கூறினர்.

தொடர்ந்து மத்தியஅ ரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனி சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News