சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகளை கலெக்டர் விட்டபோது எடுத்த படம்.
தென்பெண்ணை ஆற்றில் நாட்டின் மீன் குஞ்சுகளை விட்ட கலெக்டர்
- நாட்டின மீன் குஞ்சுக ளான கல்பாசு, சேல் ெகண்டை, கட்லா, ரோகு, மிர்கால் அடங்கிய மீன் குஞ்சுகளை விட்டனர்.
- மீன்களை அழிவில் இருந்து காப்பாற்றவும், இன பெருக்கத்தை அதிகரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிஅருகேயுள்ள பீஜேப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பாத்த கோட்டா பகுதி தென்பண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ .3 லட்சத்து 20ஆயிரம் மதிப்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுக ளான கல்பாசு, சேல் ெகண்டை, கட்லா, ரோகு, மிர்கால் அடங்கிய மீன் குஞ்சுகளை விட்டனர்.
பின்னர் கலெக்டர் இது குறித்து கூறிய போது நாட்டின மீன்களை அழிவில் இருந்து காப்பாற்றவும், இன பெருக்கத்தை அதிகரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மண்டல மீன்வளம் மற்றும் துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் ரத்தினம், சூளகிரி தாசில்தார் அணிதா,பொது பணி துறை சிவசங்கர், ஆய்வாளர் கள் முருகேசன், மூத்து வினாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், பீர்ேஐப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா சுப்பிரமணி, துணை தலைவர் நவ்சாத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.