உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை கலெக்டர் சாருஸ்ரீ பாராட்டினார்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டிய கலெக்டர்

Published On 2023-07-11 09:32 GMT   |   Update On 2023-07-11 09:32 GMT
  • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 208 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
  • வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை பெற்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 208 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் மனு க்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர்களை கூடைப்பந்து போட்டியில் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் வெற்றி பெற்று பரிசுத்தொகை மற்றும் கேடயத்தை பெற்றதையொட்டி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பாராட்டினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News