உள்ளூர் செய்திகள்

கணேசன் ஓட்டி வந்த கார் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

டாஸ்மாக் கடையில் மது வாங்கி திரும்பிய போது பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்

Published On 2023-05-08 12:44 IST   |   Update On 2023-05-08 15:14:00 IST
  • பண்ருட்டி கந்தன் பாளையத்தில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு நேற்று இரவு மது வாங்குவதற்காக கண்டரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் காரில் வந்தார்.
  • மது பாட்டில் வாங்கிக்கொண்டு காரில் திரும்பும் போது, பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த கணேசன் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலையில் கந்தன் பாளையத்தில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு நேற்று இரவு மது வாங்குவதற்காக கண்டரக்கோட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் காரில் வந்தார். மது பாட்டில் வாங்கிக்கொண்டு காரில் திரும்பும் போது மதுபான கடைக்கு அருகில் சாலை ஓரத்தில் இருந்த ,பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த கணேசன் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது பற்றி தகவல் அறிந்தத பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வகணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News