உள்ளூர் செய்திகள்

சாலையில் நெல் குவியல் மீது கார் மோதி நிற்பதையும், விபத்தில் பலியானவரையும் படத்தில் காணலாம்.

நெல் குவியல் மீது கார் மோதி புரண்டது; ஒருவர் பலி- சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம்

Published On 2022-06-19 09:49 GMT   |   Update On 2022-06-19 09:49 GMT
  • மதுக்கூர், வடசேரிலிருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் 7 பேர் வந்து இன்று அதிகாலை வந்து கெண்டிருந்தனர்.
  • நுகர்பொருள் வாணிபக் கழகம் எதிரே நெல் காயவைத்துள்ளது தெரியாமல் அதில் உள்ள பேரிகாடில் கார் மோதி உள்ளது.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் - திருக்கானூர்பட்டி சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளது. அங்கு நெல்லை சாலையில் கொட்டி வைத்து நேற்று காய வைத்துள்ளனர். பின்னர் பர்தாவை போட்டு நெல் குவியல்கள் மூடி வைக்கப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் மதுக்கூர், வடசேரிலிருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் 7 பேர் வந்து இன்று அதிகாலை வந்து கெண்டிருந்தனர். அப்போது நுகர்பொருள் வாணிபக் கழகம் எதிரே நெல் காயவைத்துள்ளது தெரியாமல் அதில் உள்ள பேரிகாடில் கார் மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது

இதில் காரில் வந்த வடசேரி நெம்மேலி பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் காரில் பயணம் செய்த ராமமூர்த்தி (50), பாலமுருகன் (35), மாரிமுத்து (60), சங்கீதா (40), அன்பரசன் (45), சிறுவன் பிரிநீத் (5) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான திருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் நெல்லை காய வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News