உள்ளூர் செய்திகள்
இரவில் பூத்த பிரம்ம கமலம் பூ.
கம்பத்தில் வீட்டில் பூத்த பிரம்ம கமலப்பூ
- ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலப்பூ பூத்தது. இரவில் ஒருநாள் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூ தாமரை மலரைவிட பெரியஅளவில் உள்ளது.
- இந்த அதிசய மலரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
கம்பம்:
கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் தனது வீட்டில் ஏராளமான பூச்செடிகள் வளர்த்து வருகிறார்.
இதில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலப்பூ பூத்தது. இரவில் ஒருநாள் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூ தாமரை மலரைவிட பெரியஅளவில் உள்ளது. இரவில் பூத்து பகலில் வாடியது. இந்த அதிசய மலரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சிலர் சூடம் ஏற்றி வழிபட்டனர்.