பஸ்சை வழிமறித்து நின்ற காட்டெருைம.
தடியன்குடிசையில் பஸ்சை வழிமறித்து நின்ற காட்டெருமை
- சமீபகாலமாக காட்டெருமைகள் குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
- மேலும் விவசாயிகள், கூலிதொழிலாளர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரைகளை முட்டி கொன்று விடுகின்றன
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, கானக்காடு, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுயானை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் வலம் வருகின்றன.
சமீபகாலமாக காட்டெருமைகள் குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் விவசாயிகள், கூலிதொழிலாளர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரைகளை முட்டி கொன்று விடுகின்றன. நேற்று தடியன்குடிசை- பெரும்பாறை இடையே பஸ்சை வழிமறித்து சாலையில் காட்டெருமை சாலையில் நின்றது.
அதை பஸ்சில் சென்ற பயணிகள் செல்போனில் படம்பிடித்தனர்.பின்னர் சிறிது நேரம் கழித்து அது வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பஸ் புறப்பட்டு சென்றது.