உள்ளூர் செய்திகள்
10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
- பாட்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர் ஏற்கனவே கிழம்பி விட்டதாக கூறினார்.
- சிங்காரவேலனை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கீரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று தேவசானப்பள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பாட்டி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர் ஏற்கனவே கிழம்பி விட்டதாக கூறினார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் கடத்தி சென்றதாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்-பெக்டர் சம்பூரணம் சிங்காரவேலனை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.