உள்ளூர் செய்திகள்
பலியான சூர்யா.
- மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரம் உள்ள சிமெண்ட் கட்டையில் மோதியது.
- திட்டச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் மேலத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சூர்யா (வயது 20).அதே பகுதியை சேர்ந்த சவுந்தராஜன் மகன் பிரகாஷ் (வயது 22).
அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் சுரேஷ் கண்ணன் (வயது 22) ஆகிய 3 பேரும் திட்டச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்பொழுது மரைக்கான்சாவடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரம் உள்ள சிமெண்ட் கட்டையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் பிரகாஷ், சுரேஷ் கண்ணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.