உள்ளூர் செய்திகள்
முருகன் பிணமாக கிடக்கும் காட்சி.
வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
- திருமணி முத்தாறு பகுதியில் உள்ள கருவேல மரத்தில் இன்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார்.
- இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்ட்டது.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் முருகன் (25). கூலித்தொழிலாளி. இவர் அருகில் உள்ள திருமணி முத்தாறு பகுதியில் உள்ள கருவேல மரத்தில் இன்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்ட்டது. சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.