உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், சிறுதானிய தொழில் முனைவோர் கண்காட்சி

Published On 2022-10-14 09:45 GMT   |   Update On 2022-10-14 09:45 GMT
  • ஒரு நாள் பயிலரங்கம் மற்றும் சிறுதானிய தொழில் முனைவோர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டது.
  • சிறுதானிய உணவின் சிறப்பை அனைவரும் அறிய வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டமை ப்பு இணைந்து உலக உணவு தினம்-2022 நிகழ்ச்சியை இதில் சிறுதானிய உணவுகள், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் புலன் சார் உணவு மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் மற்றும் சிறுதானிய தொழில் முனைவோர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டது.

மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகத்தின் செயலாளர் அனிதா பிரவீன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வளாகத்தில் புதிய விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உயா்தர சத்துள்ள உணவுகளை அனைத்து பொதுமக்களுக்கும் சரியான விகிதத்தில் வழங்குவதில் சவால்கள் உள்ளன. எனவே, வளா்ந்து வரும் உலக உணவு சந்தையின் தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உணவு தொழில்நுட்ப மாணவா்களுக்கு பொறுப்பு உள்ளது.

அதிக சா்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட துரித உணவுகளை இத்தலைமுறையினா் விரும்பி உண்டு வருகின்றனா்.

இச்சூழ்நிலையில், சிறுதானிய உணவுகளின் சிறப்புகளை அனைவரும் அறியுமாறு செய்ய வேண்டும். மேலும், சிறுதானிய உணவை இளைய தலைமுறையினருக்கு சுவையாக மாற்றுவதற்கும், தினசரி உணவில் தினையை மீண்டும் கொண்டு வருவதற்கும் பொருத்தமான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க உணவு அறிவியல் துறை மாணவா்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துணை வேந்தா் சுகுமாா், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நா்களின் கூட்டமைப்புத் தலைவா் அலோக்குமாா் ஸ்ரீவஸ்தவா, தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் (பொ) லோகநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றியனர்.

முன்னதாக, நிறுவனத்தின் ஆய்வு, ஆலோசனை மற்றும் சா்வதேச தொடா்புகள் துறைத் தலைவா் (பொ) வெங்கடாசலபதி வரவேற்றாா். முடிவில் பதிவாளா் (பொ) சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News