உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலமாக நடந்தது.

தஞ்சை கோட்டை முனியாண்டவர் கோவில் பால்குடம் ஊர்வலம்

Published On 2023-08-13 09:22 GMT   |   Update On 2023-08-13 09:22 GMT
  • 41-வது ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று நடந்தது.
  • விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை சேப்பநாய க்கன்வாரி பகுதியில் கோட்டை முனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பால்குட ஊர்வலம் நடைபெறும்.

அதன்படி 41-வது ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று விழா குழு பொறுப்பாளர்கள் தாமஸ், பூமிநாதன் ,சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

Tags:    

Similar News