உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளா்களை தொழில்முனைவோராக மாற்ற தஞ்சை தாரகைகள் பசுமையகம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-17 10:29 GMT   |   Update On 2023-01-17 10:29 GMT
  • தோட்டக்கலைத்துறை பூந்தோட்டத்தில் நாற்றங்காலுக்காக ஒரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உரிய லாபம் ஈட்டி வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தொழில்முனைவோா்களாக மாற்றும் வகையில் 'தஞ்சை தாரகைகள் பசுமையகம்' தொடங்கப்பட்டது.

இந்தப் பசுமையகத்தைத் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது ;-

இத்திட்டத்தில் பசுமைக் குழுவில் பகுதி நேர தூய்மை பணியாளா்களாகப் பணிபுரியும் பிள்ளையாா்பட்டி ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களிலிருந்து குழு உறுப்பினா்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் உயா்த்துவதற்காக, அவா்களை தொழில் முனை வோா்களாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இக்குழுவி–னருக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ஆட்சியரக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை பூந்தோட்டத்தில் நாற்றங்காலுக்காக ஒரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பூந்தோட்ட நாற்றங்காலை பராமரிப்பதற்காகத் தோட்டக்கலைத் துறை மூலம் மருங்குளம் அரசு தோட்டக்கலைத் துறைப் பண்ணையில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். பின்னர் அவா்களை ஒருங்கிணைத்து பூந்தோட்ட நாற்றங்கால் உற்பத்தியாளா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவா்கள் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் இப்பூந்தோட்ட நாற்றங்காலை பராமரித்து, பூச்செடிகளை விற்பனை செய்து, உரிய லாபம் ஈட்டி வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டு–ள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மகளிா் திட்ட இயக்குநா் லோகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், வேளாண் துணை இயக்குநா் ஈஸ்வா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News