உள்ளூர் செய்திகள்

ரெயில் மீது கல்வீசி தாக்கியதில் என்ஜின் டிரைவர் காயம்- செல்போன் வீடியோவால் வாலிபர் கைது

Published On 2022-11-04 15:52 IST   |   Update On 2022-11-04 15:52:00 IST
  • என்ஜின் டிரைவர் சரக்குரெயில் மீது கல்வீசிய வாலிபரை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
  • மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆர்.கே. நகர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக சரக்கு ரெயில் ஒன்று கடந்த 21-ந்தேதி சென்றது. அப்போது தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்த வாலிபர்களை கண்டதும் ரெயில் என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவன் திடீரென சரக்கு ரெயில் மீது கற்களை சரமாரியாக வீசினான். இதில் ஒரு கல் ரெயில் என்ஜினின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுந்தது. இதில் என்ஜின் டிரைவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் சரக்குரெயில் மீது கல்வீசிய வாலிபரை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதற்குள் அந்த இடத்தை கடந்து ரெயில் சென்று விட்டது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆர்.கே. நகர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதில் செல்போன் வீடியோவில் பதிவான காட்சியை வைத்து சரக்கு ரெயில் மீது கல்வீசி தாக்கிய கொருக்குபேட்டையைச் சேர்ந்த பூபாலன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் கல் வீசி தாக்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். கைது செய்யப்பட்ட பூபாலன் மீது 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News