உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே 65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயற்சி- தொழிலாளி கைது
- குடிபோதையில் இருந்த தொழிலாளி 65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றார்.
- அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் திரண்டதால் தொழிலாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பொன்னேரி:
பூந்தமல்லியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவர் பொன்னேரியை அடுத்த ஆமூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இருந்தார்.
அப்போது குடிபோதையில் இருந்த அவர் அப்பகுதியில் 65 வயது மூதாட்டியை கற்பழிக்க முயன்றார். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் திரண்டதால் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் முதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.