உள்ளூர் செய்திகள்

வாலாஜாபாத் அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-07-10 16:32 IST   |   Update On 2022-07-10 16:32:00 IST
  • 7 ஆண்டுகளாக வனமகோத்சவ விழா சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது.
  • காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம்:

வாலாஜாபாத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தேசிய வன மகோத்சவ விழாவை முன்னிட்டு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுழல் மன்ற மாணவ- மாணவியர் சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், காடு செழித்தால் நாடு செழிக்கும் என்ற நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை, அரசு மருத்துவ மனை, இரயில் நிலையம், வட்டார கல்வி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் நிழல் தரும் மரக் கன்றுகள் நடப்பட்டன.

அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் செய்திருந்தார். அவர் தொடர்ந்து பேசும் போது இப்பள்ளியில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வனமகோத்சவ விழா சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது. இதுவரை பதினைந்தாயிரம் மரக்கன்றுகளும், ஐயாயிரம் விதைப்பந்துகளும் இப்பள்ளி வழங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News