உள்ளூர் செய்திகள்

வீரப்பம்பாளையத்தில் இரவில் மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது- தீபம் ஏற்றி வழிபாடு

Published On 2022-12-06 10:41 IST   |   Update On 2022-12-06 10:41:00 IST
  • பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் இரவில் மட்டும் பூக்கும் அதிசயம் வாய்ந்த பூவாகும்.
  • கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரம்ம கமலம் செடியை வைத்தார்.

ஈரோடு:

பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் இரவில் மட்டும் பூக்கும் அதிசயம் வாய்ந்த பூவாகும். இந்த பூ இரவில் பூத்து விடிவதற்குள் வாடி விடும்.

இந்த பிரம்ம கமலம் பூ செடியை ஈரோடு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் பல்வேறு வகையான பூச்செடிகளை வளர்த்து வருகிறார்.

இதில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரம்ம கமலம் செடியை வைத்தார். இந்நிலையில் இந்த செடியில் நேற்று இரவு முதல் முறையாக மொட்டு வைத்து இரவு சுமார் 11.30 மணியளவில் பூத்தது. இதைப்பார்த்த சதீஷ்குமார், பாரதி தம்பதியினர் பிரம்ம கமலம் பூ இருக்கும் தொட்டியில் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

இந்த பூ பூக்கும்போது பார்த்தால் பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரம்ம கமலம் பூ பூத்தவுடன் வந்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனா். மேலும் இந்த பூவில் இருந்து நறுமணம் அந்த வீதி முழுக்க வீசியது.

Similar News