உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது

Published On 2022-09-12 16:32 IST   |   Update On 2022-09-12 16:32:00 IST
  • ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனன் லாரி உரிமையாளர்.
  • மல்லிகார்ஜுனன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனன் லாரி உரிமையாளர். இவருக்கு சொந்தமான லாரி கடந்த 9-ந் தேதி அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை பார்த்தபோது லாரியில் இருந்த 2 பேட்டரிகளை மர்மநபர் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மல்லிகார்ஜுனன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப் பதிவு செய்து இதுதொடர்பாக பெரியபாளையம் அருகே உள்ள தாமரைபாக்கம் கூட்டு சாலையை சேர்ந்த சரத்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தார்.

Similar News