உள்ளூர் செய்திகள்

உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

Update: 2022-08-10 11:27 GMT
  • குப்பையநல்லூர் அருகே கஞ்சா விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
  • சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

உத்திரமேரூர்:

உத்திரமேரூர் பேரூராட்சி குப்பையநல்லூர் அருகே கஞ்சா விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி மற்றும் போலீசார் குப்பையநல்லூர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விக்னேஷ் (வயது 21) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.

Similar News