உள்ளூர் செய்திகள்
பழவேற்காட்டில் சுனாமியால் பலியானவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி
- ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிர் இழந்தனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.
இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்து கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி மௌன நிலையில் நின்று கண்ணீர் மல்க பால் குடத்தை கடலில் கரைத்து அஞ்சலி செலுத்தினர்.