உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்

Published On 2022-12-26 16:41 IST   |   Update On 2022-12-26 16:41:00 IST
  • ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
  • ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையில் பொழுதை கழிப்பதற்காக வெளிமாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஊட்டியில் ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகிறது.

ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அவர்கள் அங்கிருந்த மலர்களையும், அலங்கார செடிகளையும் போட்டோ எடுத்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

பெரிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்கள் குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்தனர்.

இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தொட்டபெட்ட மலைசிகரத்தில் தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், கேத்திபள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, அடர்ந்த வனப்பகுதிகள் மாநில எல்லைகளை கண்டு ரசித்தனர்.

ஊட்டி தேயிலை பூங்கா, ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லாம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

கோத்தகிரி அடுத்த கேத்தரின் நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, நீர்வீழ்ச்சியின் அழகை செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News