உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது
- பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த நிலையில் முசம்மிலை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி தாயுமான்செட்டி தெருவை சேர்ந்தவர் முசம்மில் (வயது 47). இவர் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 64 பாக்கெட்டு புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த நிலையில் முசம்மிலை போலீசார் கைது செய்தனர்.