உள்ளூர் செய்திகள்
திருவொற்றியூரில் பிச்சை எடுக்கும் தகராறில் முதியவருக்கு வெட்டு 2 பேர் கைது
- மோதலில் அவர்கள் பழனியை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
- திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே பழனி (60) என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் பிச்சை எடுத்துவரும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் அவர்கள் பழனியை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.