உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் டி.எஸ்.பி அலுவலகம் அருகே சாலை தடுப்பு சுவரில் சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்து

Update: 2022-06-28 12:09 GMT
  • தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
  • சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்:

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமெண்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் சிமெண்ட் கலவை எடுத்துக் கொண்டு சென்னை நோக்கி சென்றது. அந்த லாரியை திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டிச் சென்றார்.

சென்னையில் சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரி ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கி சென்று கொண்டிருந்தது. சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டி.எஸ்.பி அலுவலகம் அருகே அதிகாலை 5 மணி அளவில் வந்தபோது வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதி சாலையோரம் நின்றது.

இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் நேற்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டது. காலை நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.அந்த லாரியை முழுவதுமாக அப்புறப்படுத்திய பின்னரே ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News