உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஷூக்களை திருடி பதுக்கிய 3 பேர் கைது

Published On 2023-02-18 14:45 IST   |   Update On 2023-02-18 14:45:00 IST
  • வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • ஏற்றுமதிக்கு சென்ற ஷூக்களை திருடி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெள்ளவேடு அருகே 400 அடி புற வழிச்சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் சோதனை செய்தபோது ரூ.50 லட்சம் மதிப்பில் திருவண்ணாமலையில் இருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதிக்கு சென்ற ஷூக்களை திருடி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஷூக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த தனசங்கர் (36), திருவாரூர் மன்னார்குடி பகுதியை சேர்ந்த இளைய மாறன் (47), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சொகி அப்துல்லா (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News