திருவள்ளூர் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த முதுகூர் ஓம் சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் உமாபதி.தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று காலை உமாபதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
உமாபதியின் மனைவி மாலையில் வீடுதிரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடம்பத்தூர் அருகே உள்ள ஏகாட்டூர், ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியே சென்றார். மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.