உள்ளூர் செய்திகள்

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி பெற்று தருவேன்

Published On 2024-04-16 09:27 GMT   |   Update On 2024-04-16 09:27 GMT
  • பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார்.
  • கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .

திருவள்ளூர்:

திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புதுகுப்பம், கோட்டைக்குப்பம், ரெட்டி பாளையம், கம்மார்பாளையம், பெரும்பேடு, சோம்பட்டு, கொல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

அப்போது பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்த முயற்சி செய்வேன். மீனவ குடும்பத்தினருக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மீன் பிடிப்பதற்கு படகுகள், வலைகள், இன்ஜின்கள் மானிய விலையில் வழங்கப்படும்.

பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார். வேட்பாளருடன் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், டி .ஜே. கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, துணை தலைவர், பரிமேலழகர், தமிழ்ச்செல்வி பூமிநாதன், காங்கிரஸ் மாநில செயலாளர் சம்பத் வட்டார தலைவர் ஜெயசீலன், புருஷோத்தமன், பழவை ஜெயராமன், கடல் தமிழ்வாணன், ரவி, தி.மு.க நிர்வாகிகள் அவை தலைவர் பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, கவுன்சிலர் வெற்றி, அன்பு, தமின்சா, ரமேஷ் பழவேற்காடு அலவி,பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, தலைவர் கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .

Tags:    

Similar News