உள்ளூர் செய்திகள்
திருப்போரூர் அருேக நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
- கடந்த 10-ந்தேதி அவர் பணிமுடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து டாட்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன்நகையை பறித்து தப்பினர்
திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி டாட்டியம்மாள். இவர் கன்னிவாக்கம் கூட்டுறவு கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 10-ந்தேதி அவர் பணிமுடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து டாட்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன்நகையை பறித்து தப்பினர். இந்த வழக்கில் ஏற்கனவே பரனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
இப்போது அவனது கூட்டாளியான போலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மணியரசன்(27) என்பவர் சிக்கி உள்ளார். இதேபோல் கேளம்பாக்கம் வீராணம் சாலையைச் சேர்ந்த ஆரம்பசுகாதார நிலைய ஊழியர் கல்பனா என்பவரிடம் நகை பறித்த எடர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.