வண்டலூர் அருகே பேராசிரியையை தாக்கி நகைபறித்த வாலிபரை விரட்டி பிடித்த பொதுமக்கள்
- வண்டலூரை அடுத்த ஓட்டேரி டி.எஸ் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் சரண்யா.
- வண்டலூர் அருகே பேராசிரியையை தாக்கி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த ஓட்டேரி டி.எஸ் நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் சரண்யா. தனியார் கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பணி முடித்து வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த மர்மவாலிபர் திடீரென சரண்யாவின் முதுகில் பலமாக தாக்கி கீழே தள்ளினான். இதில் சரண்யா நிலை குலைந்த போது அவர் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறித்து தப்ப ஓடினான். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு திரண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் நகை பறித்து தப்பி ஓடிய வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவனுக்கு தர்ம அடி கொடுத்து ஓட்டேரி போலீசில் ஓப்படைத்தனர்,
விசாரணையில் அவன் மதுரையை சேர்ந்த போஸ்(48) என்பது தெரிய வந்து. அவனை போலீசார் கைது செய்த நகையை மீட்டனர். அவன் இது போல் வேறு எங்கேனும் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.