உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-02-13 17:02 IST   |   Update On 2023-02-13 17:02:00 IST
  • மின்கம்பத்தை கூட மாற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவது மிகவும் வேதனையளிக்கிறது.
  • பல்வேறு கிராமப்புறங்களில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

மறைமலைநகர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அமைந்துள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக நுழைவு வாயில் அருகே வலது பக்கத்தில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்லும் மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்து மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் எலும்புக்கூடு போல் வெளியே தெரிகிறது. இந்த அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திடீரென பலத்த காற்று வீசினால் இந்த மின்கம்பம் கீழே விழுந்து பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பழுதடைந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை கூட மாற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இதே போல மறைமலைநகர் மின்வாரிய உட்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப்புறங்களில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News