டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்ற 3 பேர் கைது
- டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்.
- கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த சிவானந்தம் (வயது 32), ராமநாதபுரத்தை சேர்ந்த சிவா (வயது 24), ஆக இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல வண்டலூர் வெளிவட்ட சாலை டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 59), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.