உள்ளூர் செய்திகள்
தாம்பரம் பகுதியில் எல்.இ.டி பல்பை விழுங்கிய சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
- கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் வசிப்பவர் விக்னேஷ். கொத்தனாராக உள்ளார்.
- குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் வசிப்பவர் விக்னேஷ். கொத்தனாராக உள்ளார். இவருக்கு ஒன்றரை வயதில் பவித்திரன் என்ற குழந்தை உள்ளது. நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கு இருந்த சிறிய எல் இ டி பல்பை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பல்பை விழுங்கி உள்ளான். இதைக் கண்ட தந்தை உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு வயிற்றில் இருந்து பல்பை எடுப்பதற்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது.