உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் கடை உரிமையாளர்கள் வாக்குவாதம்

Update: 2022-06-27 11:36 GMT
  • காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
  • கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் முன்புறம் பல ஆண்டுகளுக்கு மேலாக பழக்கடை, பூக்கடை, வளையல்கடை, குங்குமம், விபூதி, மஞ்சள்தூள், மாலை, தேக்காய் கடைகளை நடத்தி வருகின்றனர் .

காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்த நெரிசலை குறைக்க மாவட்ட கலெக்டர் டாக்டர் மா. ஆர்த்தி கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றினர்.

அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News