உள்ளூர் செய்திகள்

செம்மஞ்சேரியில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2023-03-05 16:45 IST   |   Update On 2023-03-05 16:45:00 IST
  • டிரான்ஸ்பார்மருக்கு வரும் கேபிள் வயர்கள் வெடித்து சிதறின.
  • செம்மஞ்சேரி மின்வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து வந்து மின் வினியோகத்தை துண்டித்தனர்.

சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஜவகர் நகர், எழில்முக நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள எழில்முக நகர் பகுதி 4-வது தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. டிரான்ஸ்பார்மருக்கு வரும் கேபிள் வயர்கள் வெடித்து சிதறின. இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செம்மஞ்சேரி மின்வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து வந்து மின் வினியோகத்தை துண்டித்தனர். நேற்று காலை 11 மணிக்கு மேல் டிரான்ஸ்பார்மர் மற்றும் எரிந்த மின்வயர்கள் சரிசெய்யப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று பகல் 1 மணி வரை ஜவகர் நகர் 5 தெருக்கள் மற்றும் எழில் முகநகரில் 4 தெருக்களில் மின் வினியோகம் வழங்கப்படாததால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

Similar News