உள்ளூர் செய்திகள்

சேலையூர் அருகே வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு

Published On 2023-07-29 16:30 IST   |   Update On 2023-07-29 16:30:00 IST
  • வீட்டின் கதவை தாழ்பாள் மட்டும் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் வந்து ஜெயந்தியை அழைத்துச் சென்றார்.
  • சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம்:

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென், அவ்வையார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பஸ்சில் அகரம்தென் பஸ் நிறுத்தத்தில் வந்திறங்கினார். தாயாரை அழைத்துச்செல்வதற்காக அவருடைய மகள், வீட்டின் கதவை தாழ்பாள் மட்டும் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் வந்து ஜெயந்தியை அழைத்துச் சென்றார்.

அப்போது இவர்களது வீட்டின் அருகே நின்றிருந்த மர்ம பெண், ஜெயந்தி வருவதை கண்டதும் அங்கிருந்து அவசர அவசரமாக சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த ஜெயந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 20 பவுன் நகையை அந்த பெண் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News