உள்ளூர் செய்திகள்

சாத்தூரில் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ. 68 லட்சம் மோசடி- நிதி நிறுவன அதிபருக்கு வலைவீச்சு

Published On 2022-09-04 14:56 IST   |   Update On 2022-09-04 14:56:00 IST
  • சாத்தூர் அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.
  • கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு கெய்து சையது பாஷாவை தேடி வருகின்றனர்.

விருதுநகர்:

சாத்தூர் அருகே உள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 63). இவர் சாத்தூர் வெள்ளக்கரை ரோட்டில் நிதிநிறுவனம் நடத்தி வந்த சையது பாஷா என்பவரிடம் ரூ. 1லட்சம் சீட்டில் சேர்ந்தார். இதற்காக மாதந்தோறும் தவணை செலுத்தினார்.

தவணைக்காலம் முடிந்த பின் பணத்தை தராமல் சையது பாஷா ஏமாற்றினார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த பலரிடம் ரூ. 68 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சந்திரபோஸ் சாத்தூர் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது சையது பாஷா ஆஜராகவில்லை. இதனால் மனு தள்ளுபடியானது.

இதைத்தொடர்ந்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் சையது பாஷா ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு கெய்து சையது பாஷாவை தேடி வருகின்றனர்.

Similar News