உள்ளூர் செய்திகள்

புதிய மின் இணைப்புக்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய ஊழியர் கைது

Published On 2023-02-17 13:15 IST   |   Update On 2023-02-17 13:15:00 IST
  • லஞ்சம் கொடுக்க மனமில்லாத மூர்த்தி இது குறித்து ஈரோடு லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
  • லஞ்சம் ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி அவர்கள் கொடுத்து அனுப்பிய ரசாயணம் தடவிய பணத்துடன் மூர்த்தி இன்று உக்கரத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.

கோபி:

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் காளிகுளம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (50). விவசாயி. இவர் அந்த பகுதியில் கோழி பண்ணை அமைத்துள்ளார். கோழி பண்ணைக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டி உக்கரம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் அதே அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வரும் புங்கம்பள்ளி பகுதியை சேர்ந்த சுந்தரம் (45) என்பவர் மூர்த்தியை தொடர்பு கொண்டு புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத மூர்த்தி இது குறித்து ஈரோடு லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து லஞ்சம் ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி அவர்கள் கொடுத்து அனுப்பிய ரசாயணம் தடவிய பணத்துடன் மூர்த்தி இன்று உக்கரத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.

பின்னர் மூர்த்தி அந்த பணத்தை சுந்தரத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைவாக இருந்த லஞ்சம் ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் சுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான காணப்பட்டது.

Tags:    

Similar News