உள்ளூர் செய்திகள்
சனாதன தர்மம் குறித்து அவதூறு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கவர்னரிடம் புகார்
- கவர்னர் ஆர்.என்.ரவியிடம் விசுவ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் தலைமையிலான குழுவினர் புகார் தெரிவித்தனர்.
- நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபுவையும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று புகார்.
சென்னை:
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் ஆர்.என்.ரவியிடம் விசுவ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக்குமார் தலைமையிலான குழுவினர் புகார் தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்களை அதில் குறிப்பிட்டு இருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அலோக்குமார் கூறுகையில், இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபுவையும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று புகார் தெரிவித்ததாக கூறினார்.