உள்ளூர் செய்திகள்
தமிழகத்தின் சிறந்த அமைச்சராக உதயநிதி வருவார்- ஆர்.எஸ்.பாரதி
- உதயநிதி ஸ்டாலின் அரசியலிலே காலடி வைத்த நாள் முதல் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து வருகிறார்.
- தொடர்ந்து எல்லா வெற்றியும் அவருக்கு கிடைக்கும். தமிழகத்துக்கு அது பயன்படும்.
சென்னை:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி வருமாறு:-
தி.மு.க. மூத்த தலைவர்கள் முதல் கடைசி தொண்டர்கள் வரை எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று நடைபெற்றது.
உதயநிதியை அமைச்சராக நியமித்த கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கழக தோழர்கள் சார்பிலும், மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தின் தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்கிற முழு நம்பிக்கை என்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.
அவர் அரசியலிலே காலடி வைத்த நாள் முதல் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து வருகிறார். தொடர்ந்து எல்லா வெற்றியும் அவருக்கு கிடைக்கும். தமிழகத்துக்கு அது பயன்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.