உள்ளூர் செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1.20 கோடி உண்டியல் வசூல்

Published On 2023-07-26 07:34 GMT   |   Update On 2023-07-26 07:34 GMT
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.
  • திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் திறந்து எண்ணப்பட்டது.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. தினந்தோறும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கிருத்திகை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் திறந்து எண்ணப்பட்டது.

மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். இதில் கடந்த 39 நாட்களில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரத்து 895, 768 கிராம் தங்கம், 11 ஆயிரத்து 705 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. இந்த தகவலை திருத்தணி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News